தமிழுக்கும் என் தமிழ் உறவுகளுக்கும் வணக்கம் நான் உங்கள் ரவி.
இன்னைக்கு நாம ஒரு புராணக் கதையான நல தமயந்தி கதையை பார்க்க போறோம்.
மகாபாரதத்தில் வரக்கூடிய ஒரு கிளைக் கதை தான் வந்து நலதமயந்தி கதை. இந்த கதையை
கேட்கிறவர்களுக்கு சனிபகவானுடைய பாதிப்பு குறையும் அப்படினு ஒரு நம்பிக்கை உண்டு.
சரி ஏன் அப்படி சொல்றாங்க அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
வாங்க வீடியோ குள்ள போலாம்.
ஒரு அடர்ந்த காட்டில் ஒரு குகைக்குள்ளே ஒரு வேடுவ தம்பதிகள் வாழ்ந்துட்டு வராங்க. அந்த வேடுவனின் பெயர் ஆகுகன், மனைவி பெயர் ஆகுகி. ரெண்டு பேருமே பரஸ்பரம் அன்பும் காதலும் உள்ள தம்பதியினர். ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு முனிவர் வறாரு, அந்த முனிவர அவங்க நல்ல பாத்து இருக்காங்க, அதுமட்டுமில்லாம அந்த ராத்திரி அந்த முனிவர் அவங்க வீட்டிலேயே தங்க மாதிரி ஆயிடுது. அந்த குகையில் இரண்டு பேரும் மட்டும் தான் தங்க முடியும் அதனால் என்ன பண்றாங்க ஆகுகனும், ஆகுகியும் வெளியே படுத்துகிறார்கள்.
அப்படி படுத்து இருக்கும் போது நடு இரவில் பயங்கரமான குளிர் அடிக்குது, அந்த குளிரில அவனுடைய
மனைவி தூங்க முடியாமல் தவிக்கிறங்க. இதைப்பார்த்த ஆகுகன், முனிவர் இருந்தாலும்
பரவால்ல நீ போய் ஓரமா படுத்துக்க அப்படின்னு சொல்லறாரு. தன்னுடைய மனைவி மேல
இவ்வளவு நம்பிக்கை வைத்து ஒரு மனிதர் வந்து நான் பார்க்கவே இல்லை அப்படின்னு
சொல்லிட்டு அந்த முனிவர் வந்து அவங்க ரெண்டு பேரையும் ஆசீர்வதித்து விட்டு
போயிட்டாரு. சில ஆண்டுகளுக்கு பிறகு ஆகுகன ஒரு மிருக அடித்து கொன்னுடுது,அந்தத் துன்பம் தாங்க
முடியாம அவனுடைய மனைவியும் கூட சேர்ந்து இறந்து போறாங்க. அப்பறம் அந்த முனிவரும்
இறந்ததறு.
இந்த ஜென்மம்
இப்படியே முடிந்து போக, அடுத்த
ஜென்மத்துல ஆகுகன் ஒரு நாட்டினுடைய இளவரசனாகவும், ஆகுகி ஒரு நாட்டினுடைய
இளவரசியாகவும் பிறக்கிறார்கள். அந்த முனிவர் ஒரு அன்னப்பறவையாக பிறக்கிறார்.இவர்களுடைய
வாழ்க்கைதான் நலதமையந்தி கதை ன்னு சொல்லறோம்..
வீரசேனன் இன் மகனாக நளன் என்பவன் நெடுத
நாட்டின் மன்னனாக இருக்கிறான். பலம் அறிந்தவனாகவும், பேரழகன் ஆகவும் இருக்கிறான்
அதுமட்டுமல்லாது குதிரைகளின் சாத்திரத்தை கரைத்துக் குடித்து இருக்கிறான்.
தேவர்களுக்கு இந்திரனைப் போல, மன்னர்கள் அனைவருக்கும் தலைவனாக பெரும் புகழை பெற்று
இருக்கிறான்.
அவனைப் போலவே விதர்ப்ப நாட்டு மக்களுக்கு மத்தியில் பீமன் என்ற ஒரு மன்னன் இருந்தான், அவன் ஆற்றலும் வீரமும்
உள்ளவனாகவும், மக்களுக்கு வந்து நன்மை செய்பவனாகவும், நல்லொழுக்கங்கள் கொண்டவனாகவும், இருக்கிறான். இவ்வளவு இருந்தும் அவனுக்கு ஒரு கவலை என்னன்னு தனக்குன்னு ஒரு
பிள்ளை இல்லனு.
ஒருநாள் அவனிடம் தமணர் என்ற பிரம்ம முனிவர் வராரு, அறநெறிகளை அறிந்தவனாக
இருந்த பீமன் பிள்ளைகளை வந்து பெற விரும்பி தனது மனைவியுடன் சேர்ந்து அந்த பெரும்
முனிவரை வந்து மரியாதையுடன் வரவேற்று மனநிறைவு செய்கிறார. இதனால் அந்த முனிவர், அந்த தம்பதிக்கு
ரத்தினம் போன்ற ஒரு மகளையும் மூன்று மகன்களையும் கொடுக்கிறாரு. மகள் பெயர் தமயந்தி, மகன்கள் பெயர் தமன், தாந்தன், தமணன்.
நளன் ஒரு நாள்
தன்னுடைய நந்தவனத்தில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அழகான அன்னப் பறவையை
பாக்குறாரு,
அந்த அன்னப்
பறவையை காவலாளிகளின் மூலம் பிடிச்சி, பக்கத்துல வைச்சி பார்க்கும்போது, அந்த
அண்ணப்பறவை நளனிடம் நீ ரொம்ப அழகா இருக்க, ரொம்ப அறிவா இருக்க, இந்த நாட்டு
மக்கள் மேல பாசமாகவும் இருக்க. உனக்கு ஒரு மகாராணி வந்தா அவளும் அழகா இருக்கணும், அறிவா இருக்கணும், இந்த நாட்டு மக்கள் மேல பாசம் உள்ள ஒரு மகாராணியாகவும் இருக்கணும், அப்படிப்பட்ட ஒரு ராணி ஒரு
இடத்தில இருக்கிறாள். நான் உனக்கு அவளை பற்றி
சொல்லவா? அப்படின்னு சொல்லி தமயந்தியின் உடைய அழகு
அனைத்தையும்
மன்னனிடம் வர்ணித்தது அந்த அன்னம். இதைக் கேட்டவுடன்
மன்னனுக்கு அவளைப் பார்க்காமலேயே காதல் வந்தது .
அப்போது அந்த அன்னம் தமயந்தியிடம் தூது சொல்லவா அப்படின்னு கேட்குது. அதற்கு நளன் சம்மதம்
தெரிவிக்க, உடனே பறந்து போய் அந்த அன்னம், தனிமையில் இருந்த தமயந்தியிடம் நளனுடைய பெருமையை ஓர் பாடலா பாடுது. இதனால் நளன் மீது தமயந்திக்கு காதல் வருது.
இந்த நேரம் பார்த்து தமயந்தியின் தந்தை பீமன், தமயந்திக்கு
சுயம்வர ஏற்பாடு செய்யாரு. இந்த சுயம்வரத்திற்கு இளவரசர் மட்டுமல்லாமல் தேவர்களும் அந்த
இடத்துக்கு வந்தார்கள். அப்படி வந்த தேவர்களில்
சனிபகவானும் ஒருத்தர். இவங்க எல்லாருக்குமே தெரியும் தமயந்தி மனசுல நளன் மீது ஒரு
காதல் இருக்குன்னு, அதனால தேவர்கள் எல்லாரும் நளனுடைய உருவத்திலேயே மாறி வரங்கா.
இந்த சுயம்வரத்துல, நளனை அடையாளம் கண்டு பிடிச்சி அவன் கழுத்தில மாலைபோடனும் அப்படின்னு
நம்பிக்கையோடு வந்த தமயந்திக்கு ஒரு குழப்பம் உருவாகுது. அந்த இடத்துல கிட்டத்தட்ட 5 பேர் நளன மாதிரியே இருக்காங்க . இதுல உண்மையான நளன எப்படி கண்டு பிடிக்கிறது, என
யோசித்து பார்க்கும் போது, தேவர்கள் அப்படிங்கிற கண்ணிமைகளை மாட்டாங்க என்பது அவளுக்கு ஞாபகம்
வருது. இதன் மூலம் நளனை கண்டுபிடிச்சி அவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் நடக்குது
இந்த திருமணத்திற்கு பின்னாடி நளன் தமயந்தியை கூட்டிட்டு தன்னுடைய நாடான நெடுத நாட்டுக்கு கூட்டிச்செல்கிறான். இந்த நேரம் சுயம்வரத்திற்கு வந்து ஏமாந்துபோன அத்தனை தேவர்களுக்கும் கோபம் வருது. அவர்களில் ஒருத்தார் தான் சனிபகவான். இவர் நளனை துன்பப் படுத்துவதற்கு, ஒரு சந்தர்ப்பம் கிடைக்கணும், அப்படின்னு எதிர்பார்த்து இருந்த வேளையில், நளனுடைய தந்தை நளனுக்கு பட்டாபிஷேகம் செய்து மகாராஜா அறிவிக்கிறார். நளனும் தனது செங்கோல் ஆட்சியை செய்யறான் . இவர்களின் இனிய இல்லறத்தின் பயனாக இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறக்கிறார்கள்.அவர்கள் இந்திரசேனன், இந்திரசேனா ஆகும். இப்படி ஒரு பக்கம் நளன் வாழ்க்கை போக.
இன்னொரு பக்கம் சனி பகவான், சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.சனிபகவானுக்கு கடமையிலிருந்து தவறாத ஒருத்தரை பிடிக்க முடியாது என்று ஓர் விதிமுறை இருக்கு. இப்படியிருக்கும்போது, ஒருநாள் கோயிலுக்குப், போகும்போது, நளன் தன்னுடைய கால்களை சரியாக கழுவாமல் போறாரு. அப்ப சனிபகவான் அவரை பார்த்து, இவ்வளவு பெரிய மன்னனுக்கு, காலை கூட ஒழுங்காக கழுவ தெரியல அப்படினா, நாட்டு மக்களை எப்படி நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்ய முடியும். அப்படின்னு கழுவாத கால் வழியாக நளனை பிடித்துகிறார். .
எல்லாருடைய
வீழ்ச்சிக்கும் பின்னாடி, இந்த நேரம் காலம் இருக்கும். அதைவிட ,அவங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்.நல்ல நேரம் இருக்கிற வரைக்கும், அந்த
கெட்ட பழக்கம் நமக்கு எந்த துன்பத்தையும் தராது. ஆனால், நமக்கு கெட்ட நேரம்
வரும்போது இந்த கெட்ட பழக்கம் தான் நம்ம வீழ்ச்சிக்கு காரணமாய் இருக்கும். அந்த
மாதிரி, ஒரு கெட்ட பழக்கமும் நளனிற்கு இருந்தது. அதுதான் சூதாடும் பழக்கம் .
மகாபாரதத்தில் எந்த சூதாட்டம் பாண்டவர்களை தெருவில் நிறுத்திய தோ,அதே சூதாட்டம்தான் இப்ப நலனையும் தெருவில் நிறுத்தப் போது. ஒருநாள் நளனுடைய அமைச்சரான புட்கரன், நளனை சூழ்ச்சியின்
மூலம் சூதாட்டத்தில் நிறுத்தி,நலனை தோற்கடித்து நளனுடைய நாட்டையும் ஆட்சியையும் பெற்றுக்கொள்கிறான். இதனால நளன்
அவனுடைய நாட்டை விட்டு காட்டுக்கு வனவாசம் போறான், அதுமட்டுமில்லாமல் யாருடைய
கண்ணிலும் படாம, எங்கேயாவது போய் தன்னுடைய அடையாளத்தை தொலச்சி வாழும்
சூழ்நிலை வருது. அப்படி வெளியே போகும்போது தமயந்தியையும், தன்னுடைய 2 குழந்தைகளையும் விட்டு போறார். இத பார்த்த தமையந்தி, பணிப்பெண்களிடம் என்
குழந்தைகளை என் தந்தையிடம் ஒப்படிச்சி விடுங்க ன்னு சொல்லிட்டு நளனை பின்தொடர்ந்து போறாள்.
காட்டுக்கு போன
2 பேருக்கும் சரியான சாப்பாடு இல்லாமல் சோர்ந்து போய் விடரங்க. இதனால கிட்டத்தட்ட
மயங்கிய நிலைக்கு போறா தமையந்தி. உடனே நளன் தமயந்தியிடம், நீ உன் தந்தை நாட்டுக்கு போ அப்படின்னு
சொல்றான், ஆனா அவ அதற்கு மறுப்பு தெரிவிகிறாள். இதனால்
நளன் தமயந்தி தூக்கத்தில் இருக்கும் போது, அவளை
அங்கேயே விட்டுவிட்டு, தான் மட்டும் எழுந்து நடந்து போறான்.அவன் அவ்வாறு எழுந்து போனதுக்கு
காரணம் என்னன்ன, தமயந்தி நான் போய்ட்ட தனியா காட்டில
கஷ்டப்படா அவள் அவளுடைய தந்தை நாட்டுக்கு போய்விடுவாள் என்ற எண்ணத்துல போய்டரன்.
தமயந்தி
கண்விழிச்சி பார்க்கையில அவளைச் சுற்றி ஒரு மலைப்பாம்பு இருக்கு, அத பாத்து அவ
பயந்து ஓடும்போது, ஒரு வேடன் அவளைக் காப்பாத்தரன். அவனுக்கு தமயந்தி மேல ஆசை ஏற்பட அவனும் அவளை துரத்தினான். இதனால் தப்பித்து இன்னொரு நாட்டுக்குப் போய் வேஷம்
போட்டுக்கிட்டு பணிப்பெண்ணாக வாழ ஆரம்பிகாரால் தமயந்தி . அதே இடத்துக்கு விருந்துக்கு வந்த அவளுடைய தந்தை அவளை வலுக்கட்டாயப்படுத்தி
தன்னுடைய நாட்டுக்கு கூட்டி போறார் .
இப்ப தமயந்தி நளன் நினைத்தபடியே, அவளுடைய அப்பா வீட்டில குழந்தைகளுடன் அடைக்கலமா இருக்க.
தமயந்தியை
பிரிந்து போன
நளனுக்கு என்ன நடந்தது ? அப்படின்னா, ஒரு அடர்த்தியான காடு வழியே நடந்து போய்ட்டு இருக்கும் போது
என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க தேனும் ஒரு குரல் அவனுக்குக் கேட்டது. அந்தக்
குரல் வந்த திசையை நோக்கிப் பார்க்கும் போது, அங்கு நிறைய மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருக்கு. அதுல எரிந்துகொண்டிருந்த கார்க்கோடகன்
எனும் பாம்பு தான் அவ்வாறு கத்தியது. உடனே நளன் அந்தப் பாம்பை
காப்பாற்றினான். அந்தப் பாம்பு நலனுக்கு உதவும் நிமித்தமாக, உருவம் மாறும் பொருட்டு, அவனை கொத்துது. இதனால் நளன் கூன் விழுந்த கிழவனின் உருவத்த பெறுகிறான். மேலும்
கார்கோடகன், உனது அழகான உருவம் எப்போது வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்போது இந்த உடையை போடுன்னு சொல்லி ஒரு உடையை கொடுகுது.
அதை எடுத்துட்டு
அயோத்தி நாட்டுக்குச் போறன். அங்கு ஓர் அரசனுக்கு தேரோட்டியாக இருகான். நளனுக்கு மிகவும் வேகமாக தேர் ஓட்ட தெரியும், அந்த
வித்தையை மன்னனுக்கு கற்றுக்கொடுக்க, மன்னனும்,ஒரு
மரத்துல இருக்குற இலைகளை எவ்வளவு வேகமா எண்ணனும் அப்படிங்கிற வித்தையை நளனுக்கு
சொல்லிக் கொடுக்கிறான்.
இந்த சமயத்தில தமயந்திக்கு ஒரு சந்தேகம் வருது. நளன் எங்கேயாவது இருக்கணும். இதனால நளன், என்னைத் எப்படியாவது தேடி வர வைக்கனும் என்பதற்காக, தனது தந்தையிடம் சொல்லி சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்ற. அவள் நெனச்சபடியே, அந்த சுயம்வரத்திற்கு அயோத்தி மன்னனின் தேரோட்டியாக நளன் வருகிறான். நளனுடைய பாதம் அந்த இடத்தில் பட்ட உடனேயே தமயந்தியின் உள்ளுணர்வு ஏதோ சொல்ல, அவளுடைய கண்கள் நளனைத் தேடுது. இப்போ சுயம்வரம் நடக்க ஆரம்பிக்குது . எல்லா மன்னர்களும் வந்து உட்கார்ந்து இருக்காங்க, அந்த நாள் அன்னைக்கு தான் சனிபகவான் நளனை பிடித்து ஏழரை ஆண்டுகள் முடிவடைது. இவ்வளவு தொந்தரவு கொடுத்தும் நேர்மையாக இருக்கும் நளனை பார்த்து மனம் இரங்கி சனி பகவான் அந்த இடத்திலிருந்து விலகி போறார் .தமயந்திக்கு சுயம்வரம் நடக்கற காட்சியை பார்த்த நளன், உடனே கார்கோடகன் கொடுத்த அந்த உடையை அணிந்து மீண்டும் தன்னுடைய அழகிய உருவத்த பெறுகிறான். ஏற்கனவே உள்ளுணரவுல நளன் இங்கு வந்திருக்கான், என நினைத்திருந்த தமயந்திக்கு, முழுமையான உருவத்தில் இருந்த நளனை பார்த்ததும், மாலை சூட்டி மறுபடியும் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தனர்.
இப்படி
எல்லா துன்பங்களும்
நீங்கி நளனும்,
தமயந்தியும்
கோயிலுக்குச் போய் வழிபடும் போது, அவர்களுக்கு
காட்சியளித்த சனி பகவான், என்ன நீங்க ரெண்டு பேரும் மன்னிக்கணும். நான்
உங்களுக்கு கொடுத்த துன்பம் தவறு, உங்களுக்கு ஏதாவது ஒரு வரம் வேண்ணும்னா, கேளுங்கள் என கூற,
அதற்கு நளன் தனக்காக
எதுவும் கேட்காமல், நான் பட்ட கஷ்டத்தை, இந்த
உலகத்தில் யாருமே படக்கூடாது.நாடிழந்து,
வீட்டிழந்து , அடையாளம்
இழந்து எந்த மனிதனும் சுற்றி திரியக்கூடாது. என்னுடைய மனைவி
பட்ட கஷ்டத்தை எந்த ஒரு பெண்ணும் படக்கூடாது. தனது கணவனைப் பிரிந்து அம்மா அப்பா
வீட்டுக்கு போய் உட்காரும் ஒரு நிலைமை எந்தஒரு பெண்ணுக்கு வரவே கூடாது. அதனால் இந்த
நளதமயந்தி
கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம்
உங்களுடைய பாதிப்பிலிருந்து நீங்கனும் ன்னு
அப்படின்னு
கேட்டராம்.
இதனால தான் நலதமையந்தி கதையை கேட்பவர்களுக்கு சனிபகவானுடைய பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கை உண்டு.இந்த
நம்பிக்கை உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த கதையில வர்ற மாதிரி
நாடிழந்து, வீட்டிழந்து , அடையாளம்
இழந்து திரிபவர்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன் .
0 Comments