Ticker

6/recent/ticker-posts

தொழிலில் வெற்றி பெற 7 விதிகள்

 இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோரும் வாழ்க்கையில் முன்னேறனும் பணம் சம்பாதிக்கணும் வீடு வாங்கணும், கார் வாங்கணும், அப்படி இப்படின்னு வேகமாக ஓடி ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறோம். எவ்வளவுதான் வேலைக்குப் போய் சம்பாதித்தாலும், மேல ஏதாவது ஒரு தொழில் தொடங்கணும் அப்படி ஒரு ஆசை எல்லோருக்கும் இருக்கு. அப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருந்தா இந்த ஏழு விதிகளை கடைப்பிடித்தால் நீங்க உங்களுடைய தொழிலில் வெற்றி பெறலாம். அது என்ன என்னன்னு தெரிஞ்சுக்க வாங்க வீடியோ குள்ள போலாம்.


தன்னம்பிக்கை:

நாம மத்தவங்க மீது வைக்கக்கூடியது நம்பிக்கை. நாம நம்ம மீது வைக்கிறது தான் தன்னம்பிக்கை.

வெற்றி பெற்ற மனிதர்களுடைய வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது அவர்களுடைய தன்னம்பிக்கை.

நீங்க புதுசா ஒரு தொழில் தொடங்கலாம் அப்படி நினைக்கிறீங்க, அந்த தொழிலை தொடங்குவதற்கு முன்னாடியே நாம தோற்றுவிடுவோமோ, வெற்றி பெற முடியுமா, நம்மளால செய்ய முடியுமா, இப்படி எதிர்மறையான எண்ணங்களை நினைச்சுட்டு நாம் எந்த செயலை செய்தாலும் கண்டிப்பா நம்ம வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

எனவே வாழ்க்கையில நாம எந்த தொழில் செய்யறதா இருந்தாலும் பயப்படாமல் என்னால செய்ய முடியும், நான் வெற்றி பெறுவேன், அப்படின்னு சொல்லிட்டு தான் செய்யக் கூடிய செயல் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

"நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதையாக, விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்" - சார்லி சாப்ளின் என்று சொல்லி இருக்கிறார் . அவர், அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவே இன்று அவர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். எனவே நாம் நம் மீது முழு நம்பிக்கை கொண்டு எந்த செயல் செய்தாலும் வெற்றி பெறலாம்.

 தகவல் சேகரித்தல்:

தகவல் சேகரித்தல் என்பது நாம ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்னாடி, அந்தத் தொழிலை இப்போது யாராவது செய்து செய்து கொண்டிருக்கிறார்களா? . அந்த தொழில் செய்ய என்னென்ன தேவைப்படுகிறது, அதுமட்டுமல்லாது இந்த தொழில் செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறதா? இதுபோன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து பின்பு தான் ஒரு தொழிலை தொடங்க வேண்டும். இப்படி அனைத்து தகவல்களையும் தெரிந்த பின்பு தொழில் தொடங்கினால் மட்டுமே நம்முடைய தொழிலில் வெற்றி பெற முடியும். 

முறையான திட்டமிடல்:

இலக்கு இல்லாதவனின் வாழ்க்கை காற்றில் அடித்துச் செல்லப்படும் படகு போன்றது’ என்று சொல்வார்கள். வாழ்க்கைக்கு எப்படி இலக்கு அவசியமோ, அப்படி நாம செய்யக்கூடிய தொழில்களுக்கும் இலக்குகளை நிர்ணயித்து,  அவற்றை அடைவதற்கான திட்டங்களைத் தீட்டி, அதற்கான முழு முயற்சியில் ஈடுபட வேண்டும்.

நம்மால் சமாளிக்க முடிகின்ற காலம், காரணம், சூழல் அனைத்தையும் கருத்தில் கொண்டு இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாம,அதை அலசி ஆராயனும், மறு ஆய்வுக்கு உட்படுத்தனும். வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனப்பான்மை இல்லாமல், ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தயாரான மனப்பான்மை இருக்க வேண்டும்.

விடாமுயற்சி:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
           இன்மை புகுத்தி விடும் - இதனுடைய பொருள் அப்படின்னு பார்த்தீங்களா, முயற்சி செய்து உழைத்துக் கொண்டே,  இருந்தால்  செல்வம் பெருகும்.  முயற்சி ஒன்றுமே செய்யாமல்,சோம்பேறியாக இருந்தால் வறுமை,வாசலில் வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர்.

விடாமுயற்சி வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.         உண்மையைச் சொன்னால் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் தான் விடாமுயற்சி.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், எறும்பு ஊற ஊற கல்லும் தேயும், என்பது நம் முன்னோர் பழமொழி. அதுபோல நாம் செய்யற தொழிலில் தோல்வி அடைந்தால் கூட மனம் தளராமல் மீண்டும் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் அப்போது தான் இறுதியில் வெற்றி கிடைக்கும்.நம் தொழிலில் வெற்றி பெற விடாமல் முயற்சி செய்தால் ஒரு நாள் வெற்றி வெற்றி கிடைக்கும்.

தரத்திற்கான முனைப்பு:

தரத்திற்கான முனைப்பு என்பது நாம ஒரு தொழில் செய்து ஏதேனும் ஒரு பொருளை உற்பத்தி செய்யறோம் நா, அந்த பொருள் நல்ல தரத்துடனும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் எந்த விளைவு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்

தனது பொருளையும் மற்ற போட்டியாளர்களின் பொருளையும் ஒப்பிட்டு தரத்தை மேம்படுத்த எப்போதும்  முயல வேண்டும்.

பிரச்சனைக்கான தீர்வு:

நாம் எவ்வளவுதான் முறையான தகவல்களை சேகரித்து திட்டமிட்டு நம்முடைய தொழிலை செய்தாலும், சில நேரங்களில் நாம் தோற்று விடுவோம். அப்படி தோற்றுப் போகிற நேரத்தில் அதற்கான தீர்வுகளை கண்டுபிடித்து நாம் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும் அப்போது தான் நம்முடைய தொழிலில் நம் வெற்றி கொள்ள முடியும்.

ஊழியர் நலனில் அக்கறை:

நாம் எவ்வளவுதான் தன்னம்பிக்கையுடன் தகவல்களை சேகரித்து முறையான திட்டமிடலுடன் நமது தொழிலை செய்தாலும், அந்த தொழிலினால் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை வருமாயின் அது தோல்வி அடையும். எனவே எப்போதும் மக்களுடைய நலனில் அக்கறை கொண்டதாக  நம்முடைய தொழில் இருக்க வேண்டும்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை, முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படி ஏறு.



Post a Comment

0 Comments