Ticker

6/recent/ticker-posts

முயற்சியே முதல் வெற்றி

 மனித வாழ்வில் முயற்சி என்பது மிக முக்கிய செயல்வினையாகும். முயற்சி என்று ஒன்று இல்லையானால் ஒருவன் தனது வாழ்க்கையில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்லவே முடியாது. ஒரு குழந்தை தவழ்வதில் இருந்து தன் பிறவி இலக்கை அடையம் வரை முயற்சி என்பது தேவை படுகிறது. இதையே தான் திருவள்ளுவர் இரண்டு வரியில அழகா சொல்லி இருக்கார்.

      “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

         மெய்வருத்தக் கூலி தரும்

கடவுளே என்ன காப்பாத்து என்று அழைக்கும் போது நடக்காத காரியம் கூட, ஒருவர் முயற்சிவுடன் உழைக்கும் போது அவருடைய உழைப்புக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும் என்கிறார் திருவள்ளுவர்.



ஒருநாள் அவர்களிடம் வயதான ஒருவர் ஒரு இரகசியத்தை கூறினார். "இந்த மலையின் மேற்பகுதியில் காலபைரவி கோயில் ஒன்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைக் காரர்களுக்கு பயந்து நானும், என் மனைவியும் நவரத்தின கற்களை ஒரு வெண்கல பானையில் வைத்து கோயிலுக்கு எதிரில் உள்ள அரசமரத்தின் அடியில் அந்த பானையை புதைத்துவிட்டு வந்தோம். எனக்கு பிள்ளை குட்டிகலென்று யாரும் கிடையாது எனவே நீங்கள் இருவரும் அங்கு சென்று அந்த புதையலை கண்டறிந்து பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிச் சென்றார்.

பிறகு அவர்கள் இருவரும் அந்த புதையலை நோக்கி மலையின் மேற்பகுதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் இருவருக்கும் தாகம் ஏற்பட்டது. தாகத்தை தணிக்க அவர்கள் அங்கும், இங்கும் அலை மோதினார்கள். தாகத்தின் தாக்கத்தால் கார்முகில் "இதற்க்கு மேல் என்னால் வர இயலாது, இவ்வளவு பெரிய மலையில் கோயிலை கண்டறிவதே மிக கடினம் இதில் அந்த புதையலை எப்படி கண்டறிவது. நாம் திரும்பி சென்றுவிடலாம்” என்று கூறினான்.
அதற்க்கு வணங்காமுடி "புதையலை கண்டறியதானே இங்கு வந்தோம். அந்த வேலையை முடிக்காமல் திரும்ப செல்வது கோழைக்கு சமம்" என்று கூறினான். கோவம் கொண்ட கார்முகில் “உன்னால் அதை கண்டறிய இயலுமென்றால் நீ தாராளமாக செல்லலாம். இனி என்னால் ஒரு அடி கூட மேல் நோக்கி செல்ல இயலாது” என்று கூறி திரும்பி சென்றுவிட்டான்.

பிறகு தனியாக வணங்காமுடி மட்டும் அந்த புதையலை தேடிச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு அழகிய நீரோடையைக் கண்டான். ஆனால் காடுகள் அடர்ந்த பகுதியில் அந்த நீரோடைக்கு செல்லும் வழி அவனுக்கு தெரியவில்லை. ஒரு வயதான மூதாட்டியிடம் அந்த நீரோடைக்கு செல்லும் வழியை கேட்டான். அதற்க்கு அந்த மூதாட்டி "அதோ அந்த மாடுகள் செல்லும் வழியில் செல் அந்த நீரோடைக்கு செல்லலாம்" என்று கூறினார். பிறகு அந்த மாடுகளை பின் தொடர்ந்து நீரோடையில் தன்னுடைய தாகத்தை தணித்துக்கொண்டான்.
பிறகு மீண்டும் தன்னுடைய முயற்சியை தொடங்கினான். சிறிது தூரம் சென்றவுடன் அவனுக்கு பசிக்கத் தொடங்கியது. பசியை பொறுத்துக்கொண்டு தன்னுடைய இலக்கை அடைய போராடினான். செல்லும் வழியில் ஒரு மிக பெரிய நாவல் மரத்தை கண்டான். ஆனால் அந்த மரத்தில் ஏறிப் பழங்களை பறித்து பசியாற அவனால் முடியவில்லை. சில குரங்கு கூட்டங்கள் அந்த மரத்தின் மேல் ஏறி கிளைகளை குலுக்கத் தொடங்கின, பழங்கள் குலை குலையாக கீழே விழுந்தன. மகிழ்ச்சியுடன் கீழே விழுந்த பழங்களை உண்டு பசியாறிக்கொண்டு மீண்டும் தனது முயற்சியை தொடங்கினான். வழியில் ஒரு கடைக் காரரிடம் “காலபைரவி” கோயிலை பற்றி விசாரித்தான். அதற்க்கு அந்த கடைக் காரர் "இங்கிருந்து ஒரு பர்லாங்கு தூரம் சென்றவுடன் வலது புறம் ஒரு வழி பிரியும் அந்த வழியில் சென்றால் அந்த கோயிலுக்கு செல்லலாம்" என்று கூறினார்.
அதேபோல் அவனும் ஒரு பர்லாங்கு தூரம் சென்று வலது புறமாக பிரியும் வழியை பிடித்து சென்றுகொண்டிருந்தான்; பாதையும் முடிவுக்கு வந்தது ஆனால் எந்த கோவிலும் அங்கு இல்லை. பொழுதும் சாய்ந்து சிறிது சிறிதாக இருள் சூழத் தொடங்கியது. இருந்தும் அவன் மனதை தளரவிடவில்லை; அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். அப்பொழுது ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் அந்த வழியில் வந்துகொண்டிருந்தான். வணங்காமுடி அவனிடன் “காலபைரவி கோயிலை உனக்கு தெரியுமா?” என்று கேட்டான். அதற்க்கு அந்த சிறுவன்ஓ நன்றாக தெரியுமே... வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன்” என்று கூறி அவனை அழைத்துச் சென்று அந்த கோயில் இருக்குமிடத்தை காட்டிச் சென்றான்.
தன்னம்பிக்கை இழக்காமல் வணங்காமுடி மேற்கொண்ட விடாமுயற்சியின் பலனாக அந்த புதையல் அவனுக்கு கிடைத்தது. அத்தகைய வெற்றி பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் வழியில் அவனுக்கு உதவி செய்தார்கள். ஆனால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இழந்த கார்முகிலனுடைய வாழ்க்கை???

இயற்க்கை வளங்கள் கொஞ்சிப் பேசும் ஒரு அழகிய மலையடிவார கிராமத்தில் இணைபிரியா இரண்டு தோழர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதில் கார்முகில் என்பவன் தன்னம்பிக்கை இல்லாமலும், சோம்பேறி தனமாகவும் ஊர் சுற்றுபவன். வணங்காமுடி என்பவன் தன்னம்பிக்கையோடு, சுறுசுறுப்பாக எந்த வேலையையும் மிக அழகாக, திறமையாகச் செய்து முடிக்க கூடியவன்.

 அதுபோல தான் நண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்கள் வாழ்வில் எதையவது சாதிக்க வேண்டும் அப்படின்னு முயற்சி பண்றாங்க, முதல் முயர்சிலோ, இரண்டாவது முயர்சிலோ வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து விட்டால் மனம் தளர்ந்து அவர்களுடைய முயற்சில் இருந்து பின்னாடி பொய் விடுகிறார்கள்.

அது போல போகாமல் தன்னுடைய இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் போராடினால் மட்டுமே  முயற்சி திடுவினைஆக்கும்.


Post a Comment

0 Comments