Ticker

6/recent/ticker-posts

மாயாஜாலத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

ரோண்டா பைர்ன் எழுதிய மாயாஜாலம் என்னும் புத்தகத்திலிருந்து  சில வரிகள் படித்ததில் பிடித்தது.

மாயாஜாலத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால், அதை ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது.


நீங்கள் ஒரு குழந்தையாக இருந்த போது வாழ்க்கையை ஒட்டுமொத்த வியப்போடும் பிரமிப்போடும் நீங்கள் பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?  வாழ்க்கை உங்களுக்கு மாயாஜாலமானதாகவும், உற்சாகமிக்கதாகவும் இருந்தது.  மிகச்சிறிய விஷயங்கள் கூட உங்களுக்கு சாகச உணர்வை கொடுத்தன. புல்லின் மீது உறைந்திருந்த பனித்துளியும் காற்றின் ஊடாக சிறகடித்து பறந்த பட்டாம்பூச்சியும் நிலத்தில் கிடந்த வினோதமான இலையும் கல்லும் உங்களை பரவசப்படுத்தின.



 நீங்கள் ஒரு பல்லை இழந்த போது கூட மிகவும் உற்சாகமடைந்ததற்கு காரணம் பல் தேவதை அன்று இரவு உங்கள் வீட்டிற்கு விஜயம் செய்வாள் என்று நீங்கள் நம்பியது தான். 


பிறகு நீங்கள் கிறிஸ்மஸ் இரவை எதிர்பார்த்து நாட்களை எண்ணத் துவங்கி விடுவீர்கள்.  கிறிஸ்துமஸ் தாத்தாவால் எப்படி ஒரே இரவில் அனைத்து குழந்தைகளும் பரிசுகளை கொண்டு போய் சேர்க்க முடியும் என்பது குறித்து உங்களுக்கு எந்த யோசனையும் இல்லாமல் போனாலும் கூட அவர் எப்படியோ அதை  செய்வார் அவர் ஒருபோதும் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லை.


கலைமானால் பறக்க முடிந்தது, தோட்டத்தில் தேவதைகள் உலவினர், செல்லப்பிராணிகள் மனிதர்களைப் போல் இருந்தன, பொம்மைகளுக்கும் ஆளுமைகள் இருந்தன, கனவுகள் நினைவாகின, நட்சத்திரங்கள் உங்களால் தொட முடிந்தது, உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது, உங்கள் கற்பனைக்கு எல்லைகள் இருக்கவில்லை, வாழ்க்கை மாயாஜாலமானது என்று நீங்கள் நம்பினீர்கள்.


நாம் குழந்தைகளாக இருந்தபோது, விடிகின்ற ஒவ்வொரு தினமும் அதிக உற்சாகத்தையும் சாகசகத்தையும் கொண்டு வருகிறது என்றும், மாயாஜாலங்கள் குறித்து நாம் கொண்டுள்ள மகிழ்ச்சியை எதுவென்றாலும் தகர்த்தெரிக்க முடியாது என்றும், அற்புதமான உணர்வுகளை நாம் கொண்டிருந்தோம். ஆனால் நாம் பெரியவர்களாக வளர்ந்த உடன் பொறுப்புகளும் பிரச்சனைகளும் சிரமங்களும் எப்படியோ நம்மை வாட்டி வதைக்க துவங்கின. குழந்தைகளாக இருந்தபோது முன்பு நாம் நம்பி இருந்த மாயாஜாலம் மெல்ல மெல்ல மறைந்தது,  முற்றிலும் விடை பெற்றுக் கொண்டது. பெரியவர்கள் என்ற முறையில் குழந்தைகளுடன் இருக்க நாம் விரும்புவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில்  ஒரே ஒரு கணம் மட்டும் என்றாலும் கூட, முன்பு ஒரு முறை நாம் கொண்டிருந்த அந்த உணர்வை குழந்தைகளுடன் இருக்கும் போது மீண்டும் நம்மால் அனுபவிக்க முடிகிறது.


நீங்கள் முன்பு நம்பி இருந்த மாயாஜாலம் உண்மை என்றும், வாழ்க்கையைப் பற்றி வளர்ந்தவர்கள் கொண்டிருக்கும் சோர்வான கண்ணோட்டம் தான் பொய் என்றும் நான் கூறுகிறேன். வாழ்வில் மாயாஜாலம் நிஜமான ஒன்று. நீங்கள் எவ்வளவு நிதர்சனமானவரோ, வாழ்வின் மாயஜாலமும் அதே அளவு நிதர்சனம் தான். வாஸ்தவத்தில், ஒரு குழந்தையாக இருந்தபோது நீங்கள் நினைத்திருந்ததை விட உங்கள் வாழ்க்கை இன்னும் அதிக அற்புதமானதாகவும், நீங்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிக பிரமிப்பூட்டுவதாகவும், வியப்பில் ஆழ்த்துவதாகவும், உற்சாகம் தருவதாகவும் இருக்க முடியும். மாயாஜாலத்தைக் கொண்டு வருவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கும் போது, உங்கள் கனவு வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள் அப்போது வாழ்வின் மாயாஜாலத்தில் நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை எப்படி உங்களால் இழக்க முடியும் என்று நம்பி நீங்கள் வியப்பீர்கள்!


கலைமான்பறப்பதை நீங்கள் பார்க்காமல் போக கூடும், ஆனால் நீங்கள் ஒருபோதும் விரும்பி வந்துள்ள விஷயங்கள் உங்கள் கண் முன் தோன்றுவதை நீங்கள் நிச்சயமாக காண்பீர்கள். நெடுங்காலமாக நீங்கள் கனவு கண்டு வந்திருந்த விஷயங்கள் திடீரென்று நிகழ்வதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் கனவு மெய்யாவதற்கு அனைத்து விஷயங்களும் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டன என்பதை துல்லியமாக நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். ஏனெனில் கண்ணுக்கு புலப்படாத தளத்தில் தான் மாயாஜாலம் செயல்படுகிறது. அதுதான் அவை சுவாரஸ்யமானதாக ஒன்றாக, சாகசமான ஒன்றாக ஆக்குகிறது.


 மாயாஜாலத்தை மீண்டும் அனுபவிப்பதற்கு நீங்கள் தயாரா? நீங்கள் குழந்தையாக இருந்த போது இருப்பதைப் போல், ஒவ்வொரு நாளும் பிரமிப்பும் வியப்பும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மாயாஜாலத்திற்குத் தயாராகுங்கள்.


வாழ்கையைப் பரிபூரணமாக மாற்றக்கூடிய ஞானம் ஒரு புனித நூலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, 2000 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் இருந்தே நம்முடைய சாகச பயணம் துவங்குகிறது.




Post a Comment

0 Comments