மருத்துவ குணங்கள் நிறைந்த பட்டை பழங்காலத்தில் இருந்தே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டையானது இலவங்கப்பட்டை, அல்லது கருவாப்பட்டை என அழைக்கபடுகிறது. பட்டை சேர்த்த உணவு பொருள்கள் அதிக நறுமணத்துடனும், மருத்துவ குணங்கள் நிரம்பியும் இருக்கும். நல்ல உயர்தரமான பட்டை இலங்கையில் தான் அதிகம் விளைகிறது.
இலவங்கபட்டை என்று அழைக்ககூடிய இது மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இலவங்க மரத்தின் தண்டுகளை வெட்டுவதன் மூலம் உள்பட்டை பிரிக்கப்பட்டு அவை காய்ந்ததும் இலவங்கப்பட்டை சுருள்களாக குச்சிகளாக உடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதிக வாசனை கொண்ட இதை உணவு பொருள்களில் சேர்க்கும் போது உணவுக்கு சுவை கொடுக்கிறது. மருத்துவ ரீதியாக இவை வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.
இலவங்கப்பட்டை ஒரு சக்தி வாய்ந்த மருந்துப் பொருளாகும். இது மெட்டா பாலிசத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையில் 1. 4 கிராம் நார்ச்சத்துகளும், போதுமான அளவு கால்சியமும் உள்ளது. இதில் விட்டமின் ஏ, பி மற்றும் கே, ஆன்டி ஆக்ஸிடன்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.
இலவங்கப்பட்டை பயன்படுத்தும் முறை:
✅ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டைத்துளை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க வேண்டும்.
✅ ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை உற்றி அவற்றுள் ஒரு சிறிய இலவங்கப்பட்டை போட்டு நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும், பின்பு அவற்றை ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இலவங்கப்பட்டையின் மருத்தவ பயன்கள்:
பாக்டீரியா எதிர்ப்பு
இலவங்கப்பட்டையில் சின்னமால்டிஹைடு என்ற பொருள் உள்ளது. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. சின்னமால்டிஹைடு என்பது பட்டைகளில் இருக்கும் அத்தியாவசியமான எண்ணெய் ஆகும். இதில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது சால்மோனெல்லா போன்ற சில பாக்டீரியாக்களை தடுக்கிறது. பூஞ்சைகளால் ஏற்படும் சுவாச நோய்களை கட்டுப்படுத்த இந்த எண்ணெய் உதவுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது
இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் செல்களை பாதிப்பில் இருந்து காக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை கோலின், பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்களால் நிறைந்துள்ளது. இலவங்கப்பட்டை மிக சக்தி வாய்ந்த பொருளாகும்
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க இன்சுலின் மிக முக்கியமான காரணமாகும். இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கிறது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை குறைக்கிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது:
இலவங்கப்பட்டை உட்கொள்வது இரத்த அழுத்தத்தில் மாற்றத்தை உண்டாக்க உதவுகிறது. இதயத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.
வாய் துர்நாற்றம் நீங்க:
வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.
செரிமான சக்தியைத் தூண்ட:
எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.
இருமல், இரைப்பு
சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.
விஷக்கடிக்கு
சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க
வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.
பெண்களுக்கு
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.
தாது விருத்திக்கு
தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.
இலவங்கப்பட்டை, நிலவேம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் பூச்சிக் கடிகள் குணமாகும்.
இருமல் பிரச்னை உள்ளவர்கள் இலவங்கப்பட்டையுடன் அக்காரா மற்றும் திப்பிலி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு மற்றும் இருமல் விலகும்.
இலவங்கப்பட்டையுடன், அதிவிடயம் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படும்.
இலவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுவது நிற்கும்.
இலவங்கப் பட்டையுடன், மாம்பருப்பு, கசகசா இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை 100 மிலி தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி குணமாகும்.
இலவங்கப்பட்டை,
சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும்.
இலவங்கப் பட்டையுடன் சிறு குறிஞ்சான் சம அளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
0 Comments